Friday, 18 September 2009

பல்லவியின் பிரதிபலிப்பு

மடி மீது தலை வைத்து துயிலுரங்கச்செய்யவில்லை
அரை தூக்கத்தில் எழுந்து ஆறுதல் கூற வலையில்லை
தோள் மீது தோள் சாய்த்து துயர் நீக்க அருகிலில்லை
பரிவுடன் கரம் பிடித்து கண்ணீர் துடைக்க வழியில்லை

எனினும் எனினும்
அவள் மட்டும்
என்றென்றும்
நீங்காதிருக்கிறாள் !

விந்தையின் வியப்பு அவளல்லவா?

Sunday, 13 September 2009

அவள் பெயர் பல்லவி

சனி, ஞாயிறு - சிறு வயதில் அந்த இரண்டு நாட்கள் எப்படி உருண்டோடும் என்பதே ஒரு புதிராக இருக்கும். திங்கள் என்றாலே பார்வையும் புத்தியும் மங்கலாகிவிடும். வெள்ளியை விடிவெள்ளியாகவே எதிர்நோக்கச்செய்யும்.

வாரங்களை வெறுத்த எனக்கு விடுமுறை என்றாலோ மிக விருப்பம். விடிகாலையில் எழ வேண்டாம். பள்ளிக்கு செல்ல வேண்டாம். விரும்பாத ஆசிரியர்களையும் பார்க்க வேண்டாம்.

வருடங்கள் கழிந்தன, விருப்பு வெறுப்புகள் இடம் மாறின.
சனி சலித்தது. திங்களும் தித்தித்தது.

இதெற்கெல்லாம் காரணம் அவள் தானோ?
அதில் என்ன சந்தேகம்?

வாழ்க்கையில் வர்ணங்களை தந்தவள்,
வசந்தங்களை வரவழைத்தவள்,
அவள், வாரங்களில் தானே வருகிறாள்......

வியக்கவைக்கும் - அவள் வருகை.
படபடக்கவைக்கும் - என் மனதை !